இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் புதிய வர்த்தக வரிகளை கடந்த மாதங்களாக அறிவித்து வந்துள்ள நிலையில், அந்த வரிகள் இன்று ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது அந்த வரி 20 வீதமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் இலங்கையின் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வரி விதிப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ள போதிலும், இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஏற்கனவே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரி விதிப்புக்கள் அமுல்படுத்தப்படுகின்ற நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.