இன்றைய சமூகத்தில் பெண்கள் வகிக்கின்ற முக்கியப் பங்கு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய , பெண் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அதனை நிறைவேற்றும் திறன் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திடம் உள்ளதென தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர் அங்கமான இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்தால், வெள்ளிக்கிழமை (01) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது’ வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இவ்விழாவில், ஒரு பெண் வழிகாட்டி பெறக்கூடிய மிக உயர்ந்த கௌரவ விருதான ‘ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது’ 306 பெண் வழிகாட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
அதேவேளை, ‘பிரதமர் பெண் வழிகாட்டி விருது’ 18 பேருக்கு வழங்கப்பட்டது.