ஆரம்பமானது சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்:

கிழக்கில் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படு கொலைக்கு கான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்த கையெழுத்து போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், பாக்கியசோதி அரியநேத்திரன் , முருகேசு சந்திரகுமார், சுரேஸ் பிறேமச்சந்திரன், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் சரவணபவான் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வமாக கையெழுத்து இட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *