அணுவாயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்துள்ளன. இப்போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட உலகின் பல நாடுகளது தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அது தேவையில்லாத சோதனை என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், அணுவாயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அணுவாயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனான ‘போஸிடான் சூப்பர் டார்பிடோ’ வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விடவும் தாக்கும் திறன் கொண்டது.
பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.