இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இரண்டு T-56 வகை துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, T-56 ரக துப்பாக்கிகள் 2, அதற்கான மகசீன்கள் 2, தோட்டாக்கள் 60, தொலைநோக்கி 1, வாள் 1 ஆகியவற்றுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரனை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.