Diego Garcia தீவில் மூன்று ஆண்டுகளாக தவித்துவரும் 56 இலங்கையர்கள்!

Diego Garcia தீவில் கடந்த 3 ஆண்டுகளாக தவித்துவரும் 56 இலங்கையர்களின் நிலை மோசமடைந்துவருவதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அல்லது ரூமேனியாவிற்கு கொண்டு செல்ல ஆராயப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு படகுமூலம் பயனித்துகொண்டிருந்த 64 இலங்கை அகதிகள் கடல் சீற்றம், மற்றும் இயந்திரக்கோளாறு காரணமாக நடுக்கடலில் உள்ள சிறிய தீவு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் என கூறப்படுகிறது.

குறித்த அந்த தீவு இந்துசமுத்திரப்பகுதியில் அமைந்துள்ளதோடு, பொரித்தானியா மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளமாக இயங்கிவருகிறது.

அந்த பிரதேசத்தின் அசாதாரண நிலை மற்றும் அந்த மக்களை பிரித்தானியாவுக்கு வரவழைத்தால், அது புலம்பெயர் விவகாரத்தில் இன்னொரு சிக்கலை உருவாக்கும் என பிரித்தானிய அரசாங்கம் அஞ்சியது.

குறித்த தீவுக்கான உயர் அதிகாரி Paul Candler தெரிவிக்கையில், முகாமில் புலம்பெயர் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்றும், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்வதே உரிய முடிவாக இருக்கும் என அரசாங்கத்திற்கு தற்போது கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அங்கிருந்து ஏற்கனவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட 8 பேர் தவிர்ந்து Diego Garcia தீவில் இதுவரை காலமும் தடுத்துவைக்கப்பட்டிருந்த எஞ்சிய 56 இலங்கையர்களை தற்போது பிரித்தானியா அங்கிருந்து வெளியேற்றவேண்டிய கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய சிலரை ருமேனியாவிற்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கவும், அவர்களை 6 மாதங்களுக்கு பின்னர் பிரித்தானியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை குறித்த அகதிகளில் மீண்டும் இலங்கை செல்ல விரும்புவோருக்கு நிதி உதவி வழங்கி அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பிவைக்கவும் பிரித்தானியா முனைப்பு காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *