ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநர்கள் இன்று (25) பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக சம்பா ஜானகி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹனிப் யூசுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக வசந்தகுமார விமலசிறி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக கபில ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்