வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை விடுதலை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி வழங்கிய மரணதண்டனைக்கு எதிராக எமில் ரஞ்சன் லமாஹேவாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்மறையிட்டு மனுவை இன்று (09) விஜித் மலல்கொட, எஸ்.துரைராஜா, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்கை பரிசீலித்த உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.