60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10 சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் 8.5 சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதனால், அதிகமான மூத்த பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.