பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,
இவற்றில் 4 குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.
அதற்கமைய 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.