தெஹிவளையில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடவத்த வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இதில் 45 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளரும் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், நேற்று காலை காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகமவில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தங்காலையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் கடந்த 48 மணித்தியாலங்களில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.