இஸ்ரேல் நாட்டு பெண்கள் 42,000 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு தங்கள் நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கோரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதைப்போல தற்காத்துக் கொள்ளவும், ஆயுதங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்புகளிலும் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின் படி, ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு 42,000 இஸ்ரேலிய பெண்கள் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அவற்றில் 18,000 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது காசா போருக்கு முன்பு துப்பாக்கி உரிமம் வைத்து இருந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் 3 மடங்கு அதிகமாகும்.
பதற்றமான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் மட்டும் தற்போது 15,000 பெண்கள் துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.