கேரளா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றன.
இதுவரையில் 316 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மேலும் 240 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.