33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிகப்பட்சமாக Marnus Labuschagne 71 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Woakes 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களும் இழப்பிற்கு 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகப்பட்சமாக Ben Stokes 64 ஓட்டங்களையும், Dawid Malan 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Adam Zampa 3 விக்கெட்டுக்களையும், Mitchell Starc, Josh Hazlewood, Pat Cummins மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *