30 வயதிற்கு மேல் கண்களை பாதுகாக்கும் ஆரோக்கிய வழிகள்! 

மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஓர் உறுப்பு ஆகும். மனித கண்கள் முப்பரிமாண நகரும் உருவத்தை வழங்க உதவுகின்றன, பொதுவாக பகல் நேரங்களில் நிறங்களை உணர்த்துகின்றன.

மனிதக் கண் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு சிறப்பு படைத்த கண்கள் முப்பது வயதிற்கு மேல் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

இந்த கண்பார்வை பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு கண்களை பாதுகாக்க வேண்டும் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நாம் புகைப்பிடித்தால் நுரையீரலுக்கு மட்டும் பிரச்சனை வருவது கிடையாது. அதிலிருந்து வரும் புகை நமது உடல் நலத்தை முற்றிலும் பாதிக்கிறது.

இந்த புகையில் இருந்து வரும் நச்சுக்கள் நமது உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதனால் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிட வேண்டும்.

2. கண்களின் ஒளியை கட்டாயமாக நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதற்காக நாம் 30 வயதிற்கு மேல் கண்களுக்கு கண்ணாடி அணிவது மிகவும் நல்லது.

நீங்கள் டிவி லாப்டப் மற்றும் போன் பயன்படுத்தும் போது அதில் இருந்து வரும் நீலக்கதிர்கள் உங்கள் கண்களை பாதிக்க கூடும். எனவே இந்த நேரத்தில் கண்ணாடிகளை அவசியம் அணிய வேண்டும்.

3. நாம் ஒளித்திரைகளை பார்க்கும் போது அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒளித்திரைகள் என்பது டிவி லேப்டாப் போன்ற சாதனங்கள் ஆகும்.

நீங்கள் நாள் முழுக்க கணணி முன் இருந்து வேலை பார்ப்பவராக இருந்தால் நீங்கள் கண்களுக்கு போதியளவு ஓய்வை கொடுக்க வேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ந்து திரையை பார்த்தால் 20 நொடிகள் உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

4. உடலில் எப்போதும் போதியளவு நார்ச்சத்து அவசியம். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். கண்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தண்ணீர் மிகவும் அவசியமாகும்.

தினமும் போதியளவு தண்ணீர் குடித்தால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் லூப்ரிகேஷனை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *