மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
கைதான 18 மீனவர்களையும் விசாரணைக்காக யாழ்- காங்கேசந்துறை துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதோடு தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.