2024 இல் இதுவரையான காலப்பகுதியில் 5,37,887 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,11,284 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 16,830 சுற்றுலாப்பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 16,548 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து 10,546 சுற்றுலாப்பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,926 சுற்றுலாப்பயணிகளும், பிரான்ஸிலிருந்து 7,018 சுற்றுலாப்பயணிகளும், சீனாவிலிருந்து 6,892 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.