தொழில்நுட்பம் வளர வளர சினிமாவின் வளர்ச்சியும் அபரிவிதமாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது பெரும்பாலான படங்களில் விஎஃப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கிறது. ரசிகர்களுக்கு பார்க்க இது தத்ரூபமாக இருந்தாலும் இதற்கான மெனைக்கிடல் அதிகமாக இருப்பதால் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மூன்று படங்களின் ரிலீஸ் மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பல வருடங்களாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் அயலான். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் விஎஃப்எக்ஸ் வேலையால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பதால் அதிலும் கொஞ்சம் வேலை இருக்கிறதாம். சமீபத்தில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி மூலம் பெரிய சிக்கலை ஏஆர் ரகுமான் சந்தித்துள்ளதால் இப்போது இந்த வேலை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் தீபாவளிக்கு அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போய் உள்ளது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என இயக்குனர் கூறி இருந்தார்.
ஆனால் இப்போது இந்த படத்திலும் விஎஃப்எக்ஸ் வேலையால் தாமதமாகி கொண்டிருக்கிறது. ஆகையால் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2.
ஏற்கனவே இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது இந்த படத்திலும் நிறைய தொழில்நுட்ப வேலை இருப்பதால் ஏப்ரல் ரிலீசுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அயலான், தங்கலான் மற்றும் இந்தியன் 2 படங்களின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.