2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல்
செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள்
ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.