
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில், கடற்கரைய அண்டிய பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த இரவு அங்கு விரைந்த பொலிஸார் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த சில வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.