காங்கேசந்துறைக்கும், காரைக்காலுக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும், அதற்கான ஆயத்தப் பணிகளாக காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I.N.D.S.I.R நிறுவனத்தால் நடாத்தப்படவுள்ள குறித்த பயணிகள் கப்பல சேவையில் முதற் தடவையாக 120 பயணிகள் பயணிப்பார்கள் எனவும், ஒவ்வொருவரும் தம்முடன் 100 கிலோ எடையுடைய பொருட்களை எடுத்து செல்ல முடியும் எனவும், பயணக் கட்டணமாக Rs.40,000/= இலங்கை ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.