
ராஜபக்ஷேக்களின் அணியை சேர்ந்தவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
இன்று (17) காலை, அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, மோதுண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பியசேன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.