Home தாயக செய்திகள் கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு ஆறு...

கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு ஆறு திருமுருகன் கோரிக்கை:

12
0

காங்கேசன்துறை சந்திக்கும் கீரிமலை சந்திக்கும் இடையே இடிபாடுகளுடன் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன்அவர்கள் இன்றைய தினம் சென்று பார்வையிட்ட பின்னரே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்திரத்திற்கு முன்னர் அதற்குரிய அனுமதி கிடைத்தால் அவ்விடத்தில் (06.04.2023) பங்குனி உத்திரத்திரத்தன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல நூண்டாண்டு பழமையான குறித்த கீரிமலை ஆதிசிவன் ஆலயம் ஈக்கப்பட்டு அப்பகுதியை உள்ளடக்கியே மஹிந்த ராஜபக்சேவின் உல்லாச அரச மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அப்பகுதிக்கு சென்றுவந்த அவ் ஊர் வாசிகள் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இக் கோயிலுக்கு அருகிலேயே பழமையான கிருஷ்ணர் கோயில் ஒன்றும் பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டதும், திசையுக்கிரசிங்க மன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி தனது குதிரை முகம் நீங்க கீரிமலையில் வந்து நீராடிவிட்டு மாவிட்டபுரம் முருகனிடம் செல்வதற்காம அமைத்ததுமான “சுரங்கம்” ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.