Home செய்திகள் இலங்கை மக்களுக்கு தடை! வெளிநாட்டவர்க்கு அனுமதி!! இலங்கையில் நடக்கும் விசித்திர ஆட்சி:

இலங்கை மக்களுக்கு தடை! வெளிநாட்டவர்க்கு அனுமதி!! இலங்கையில் நடக்கும் விசித்திர ஆட்சி:

15
0

இலங்கையின் சுதந்திர சதுக்கம் பகுதியில் உள்நுளைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை எனவும் விசித்திரமான அறிவிப்பு இலங்கையில் வெளியாகியுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடிய இலங்கையின் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு இலங்கையில் எவ்வாறான ஆட்சி இடம்பெறுகின்றது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் அரசாங்கத்திற்கும், அடக்குமுறை ஆட்சிக்கும் எதிராக அதிகரித்துவரும் மக்கள் எழுச்சி மற்றும் தொழிற்சங்க போராட்டங்களால் அச்சமடைந்துள்ள ரணில் அரசாங்கம் கடந்த ஆண்டு இடம்பெற்றது போன்ற போராட்டங்களால் கொழும்பு முடக்கப்படுவதையும், ஆட்சி கலைக்கப்படுவதையும் தடுக்கும் முகமாகவே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.