விலையேற்றத்தை கட்டுப்படுத்தி வரிச்சுமையை குறைத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும், பாடசாலை உபரகரண தட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், மற்றும் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அங்கம் மற்றும் தொழிற்சங்கங்களால் இன்று (15) வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று (15) ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், மருத்துவ சேவை சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, பெண் விடுதலை சிந்தனை அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியதுடன் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.