Home முக்கிய செய்திகள் காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிக்கும் பொலிஸார்!

காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிக்கும் பொலிஸார்!

16
0

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸாரினால் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனாலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் சந்தேகங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பில் மைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று(14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சந்தேகம் காணப்படின் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும். காலாவதியான விஷத் தன்மையுடைய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை.

எனவே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் காணப்பட்டால், குறித்த சாட்சிகளுடன் சென்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தால் அது தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

பாதுகாப்புதுறையினரின் சில செயற்பாடுகள் தொடர்பில் எம் அனைவருக்கும் முழுமையான தெளிவு கிடையாது. கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத பொலிஸாரும் எமது நாட்டில் காணப்பட்டனர். இவை தொடர்பிலும் இன்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.