Home செய்திகள் அம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் சீனாவின் சைனோபெக் நிறுவனம்: ஜனாதிபதி ஊடக பிரிவு

அம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் சீனாவின் சைனோபெக் நிறுவனம்: ஜனாதிபதி ஊடக பிரிவு

14
0

இலங்கையில் எரிசக்தி மற்றும் துறைமுக துறைகளில் முதலீடு செய்வதற்கான தீவிர முயற்சிகளில் “சீனா” ஈடுபட்டுள்ள நிலையில் சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சைனோபெக் இலங்கையின் அம்பாந்தோட்டையில் முதலீடு செய்யப்போவதாக ஜனாதிபதி ஊடக பிரிவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் பெட்ரோகெமிக்கல் கூட்டுத்தாபனம் எனவும் அழைக்கப்படும் சைனோபெக்கின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாங்கள் தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிப்பது குறித்து கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டு;ள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவின் துறைமுகம் காணப்படும் அம்பாந்தோட்டை பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிறுவுவதற்கு தேவையான முழுமையான நிதியை வழங்க தயார் என இந்த சந்திப்பில் சீன நிறுவனம் தெரிவித்துள்ளர்து.