Home செய்திகள் யாழில் இடம்பெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி:

யாழில் இடம்பெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி:

11
0

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்று யாழ்ப்பாணத்தில் “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி” ஒன்று இடம்பெற்றது.

யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் யாழ் பரியோவான் கல்லூரியும் இணைந்து கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வீதியெங்கும் வழங்கியவாறு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வந்தடைந்து மீண்டும் பரியோவான் கல்லூரியை சென்றடைந்த இந்த நடைபவனியில் யாழ் வைத்தியசாலை ஊழியர்கள், யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துக்ண்டிருந்தனர்.