Home செய்திகள் நிதி வழங்க மறுக்கும் நிதி அமைச்சு – தேர்தலை நடாத்துவதில் சிக்கல்: தேர்தல் ஆணையாளர்

நிதி வழங்க மறுக்கும் நிதி அமைச்சு – தேர்தலை நடாத்துவதில் சிக்கல்: தேர்தல் ஆணையாளர்

12
0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டபடி நிதியமைச்சு உரிய நிதியை வழங்கும் என கருதவில்லை எனவும், இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் எனவும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிதியமைச்சு தொடர்ந்தும் நிதியை நிராகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள்குறித்து இன்றும் நாளையும் ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளிற்காக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடினால் தேர்தலை நடத்துவதற்காக அரசமைப்பின் மூலம் ஆணை வழங்கப்பட்ட நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பிக்க தயார் என புஞ்சிவேவ  டெய்லி மிரரரிற்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திடம் மீண்டும் செல்லும் நடவடிக்கையை ஏற்கனவே மனுதாக்கல் செய்தவர்களே முன்னெடுக்கவேண்டும் எனவும், நிதியமைச்சு நிதியை வழங்கவேண்டும் என்ற உத்தரவிற்கான மனுவை ஐக்கிய மக்கள் சக்தியே சமர்ப்பித்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.