இலங்கை – யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை ஶ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் காரைநகர் கடற்பரப்பில் 4 மீனவர்ளும் பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்களுமாக கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிநாடு புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடைய இரு படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.