Home செய்திகள் 4 வருடங்களாக காட்டில் வசித்துவந்த முன்னாள் போராளி!

4 வருடங்களாக காட்டில் வசித்துவந்த முன்னாள் போராளி!

23
0

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

“பாலா” எனப்படும் குறித்த போராளி கடந்த 4 வருட காலமாக காட்டிலுள்ள பழங்களை உண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் வாழ்ந்து வந்துள்ளார். 

மனநலம் குன்றிய நிலையில் காணப்பட்ட இவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்தமை தொடர்பில் தகவலறிந்த அவரது சக முன்னாள் போராளிகளும், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் அவரை தேடி அப்பகுதிக்கு சென்றபோது அவர் இவர்களைக் கண்டதும் கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவாராம்.

இவ்வாறான நிலையிலேயே அவரை தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து அப்பகுதி கிராம சேவைகர், குறித்த போராளியான பாலாவின் உறவினர்கள், மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்,  பாலாவை மடக்கிபிடித்துள்ளனர்.

அதன் பின்னர், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து, அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு, முன்னாள் போராளியான பாலா ஏறாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நகுலேஸ் என்பவர் கூறுகையில்;

“மொதுவாக கிட்ட நெருங்கியவுடன், நீங்கள் வர வேண்டாம்,” என சொல்லி விட்டார். அன்பாக தான் சொன்னார். பிறகு வா பாலா என்று சொல்லி அவருடன் நெருங்கி கதைத்தோம்.

முடியெல்லாம் வெட்ட வேண்டும். நீயொரு முன்னாள் போராளி, என்ன பிரச்னை, நாங்கள் உன் பிரச்னையை தீர்த்து வைக்கின்றோம் என்று கதைத்தோம். எனக்கு ஒன்றும் இல்லை, முடியெல்லாம் வெட்ட முடியாது என சொன்னார்.

ஒரு மாதிரி மூன்று நாட்களில் நாங்கள் கூப்பிட்டால் வரும் அளவிற்கு அவரை வளப்படுத்தி விட்டோம்;.” என நகுலேஸ் கூறினார்.