Home செய்திகள் பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் பணிப்பு:

பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் பணிப்பு:

14
0

கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) எதிர்க்கட்சி எம்பி புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளை விடுத்து தற்போது நாட்டின் பொது பிரச்சினைகளுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

என்றாலும் கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்திருக்கிறேன் என்றார்.