Home உலக செய்திகள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 6 இலங்கையர் கைது!

படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 6 இலங்கையர் கைது!

21
0

தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் 6 பேர் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குற்ரச்சாட்டில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 இலங்கை அகதிகளும் தூத்துக்குடி மாவட்டம் குளத்துவேப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெரவலப்பள்ளி மற்றும் வேலூர் மாவட்டம் குடிமல்லூர் முகாம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக பொலிஸாரின் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.