Home செய்திகள் இத்தாலிக்கு வேலைக்கு செல்ல இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

இத்தாலிக்கு வேலைக்கு செல்ல இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

12
0

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கை பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்க்கு இரு நாடுகளிடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 87 ஆயிரத்து 702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் இணையத்தளம் ஊடாக கோரப்படவுள்ளன.

பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.