Home செய்திகள் மகளீர் தினத்தில் முல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

மகளீர் தினத்தில் முல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

12
0

சர்வதேச மகளிர் தினமான இன்றைய நாளில் (மார்ச் 08) கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு  மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 2017.03.08  இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கடந்த 7 வருடங்களாக தமக்கான நீதியினை கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்திவரும் நிலையில், மகளீர் தினமான இன்று பதாகைகள், பனர்கள் சகிதம் ஒன்றுகூடிய பெருமளவான உறவுகளால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நாவே கண் திறந்து பார் ! எமகான நீதியை வழங்கு ! சிறைகளில் வாடும் எம் உறவுகளின் விடுதலைக்கு உதவு ! காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தி எமக்கு பதில் சொல் ! போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.