Home தாயக செய்திகள் வடக்கில் இருக்கும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான மேலதிக பயிற்சி நிலையம் திறந்து வைப்பு:

வடக்கில் இருக்கும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான மேலதிக பயிற்சி நிலையம் திறந்து வைப்பு:

20
0

யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கில் இருக்கும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான மேலதிக பயிற்சி நிலையம் (Simulation centre) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சிய யாழ் மருத்துவ பீட பழைய மாணவ சங்கத்தின் (Jaffna Medical Faculty Overseas Alumni – United Kingdom) பல மில்லியன் ரூபா பங்களிப்பில் கட்டப்பட்டிருக்கும் இப் பயிற்சி நிலையத்தை அதன் தலைவர் Doctor Navaneethan அவர்கள் நேற்றைய (06) தினம் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில், யாழ், மருத்துவபீட பீடாதிபதி, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.