உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பை மார்ச் மாத இறுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில் உயர் நீதிமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு திறைசேரி உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தமையின் பின்னரே இப் புதிய திகதி தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.