ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
துரித கதியில் வேலைகள் நடைபெற்று நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார். இருப்பினும் வடமாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள பல சிலைகள் அதற்கான தன்மையையும், கம்பீரத்தையும், இழந்து பேருக்கு சிலை செய்தது போல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளமையையே காணமுடிகிறது. குறிப்பாக மாதகலை அண்மித்த சுழிபுரம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிவனின் சிலையில் கம்பீரமோ, அருள்பாலிக்கும் கண்ணோ, இறைவனுக்கே உரிய தத்ரூபமோ இல்லை. ஆனால் மிக, மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த நடராஜர் சிலையும் பிரம்மாண்டமாக பார்ப்பதற்கு அதேபோல் காட்சியளித்தாலும் முகத்தின் தோற்றம் நடராஜராகவோ. அன்றி அருள்பாலிக்கும் இறைவனாகவோ தெரியவில்லை. இதை நன்கு உற்று பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் இச் சிலை நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
