அவுஸ்திரேலியாவிலிருந்து பலவந்தமாக இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளன.
அவுஸ்திரேலியாவின், யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்தே குறித்த தமிழர் பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளதாக அறிந்த மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
” அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்பாதே”
“கொலைகளும், காணாமல் போதலும் இலங்கையில் இன்னமும் தொடர்கிறது”
“கைதுகளும், சிறைவாசமும் தமிழர்களை இன்னமும் துரத்துகிறது”
“அனுப்பாதே… அனுப்பாதே… இலங்கைக்கு திருப்பி அனுப்பாதே”
போன்ற கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
