உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினூடாக சுயாதீனமாக செயற்படக்கூடிய அதிகாரம் நிதி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டுடன் இல்லாமல் செய்யப்பட்டமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த பாரிய ஒத்துழைப்பாகவே அமைந்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த 3,500 அரசு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து தேர்தல் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.