Home உலக செய்திகள் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்த படகில் (Ferry) தீ விபத்து!

இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்த படகில் (Ferry) தீ விபத்து!

23
0

இங்கிலாந்தின் பிரதான துறைமுகமான டோவரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்த பயணிகள் படகு (Ferry) ஒன்று ஆங்கிலக் கால்வாயில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரான்ஸ் கலை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிரென்சு கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு (வெள்ளிக்கிழமை) குறித்த படகின் இயந்திர அறையில் ஏற்பட்ட தீயே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை எனவும் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது அப் படகில் 94 பயணிகளும், 89 பணியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் இருந்து பயணிகளையும், பணியாளர்களையும் மீட்க இங்கிலாந்தின் Dover, Ramsgate மற்றும் Dungeness ஆகிய பகுதிகளில் இருந்து 3 உயிர் காக்கும் படகுகளும், பிரான்ஸிலிருந்து ஒரு தீயணைப்பு படகும் விரைந்து சென்று துரித கதியில் செயற்பட்டதன் மூலமே உயிர்ச்சேதங்கள் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பிரென்சு கடலோரக் காவல்படையினர் மேலும் தெரிவித்தனர்.