கடந்த முதலாம் திகதி நள்ளிரவிலிருந்து காணாமல் போயிருந்த 25 வயது பெண் இன்று(04) அதிகாலை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டிருந்த வேளை ஆழ் கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து இன்று அதிகாலை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மிதந்த குறித்த பெண்ணின் சடலத்தை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று கரைக்கு கொண்டுவந்தனர்.
சடலத்தை பார்வையிட்ட தந்தை அது தனது மகள் தான் என உறுதிப்படுத்தியதை அடுத்து மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.