பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், வீதிகளில் இறங்கி போராட்டம் நடாத்துவதால் ஆட்சி மாற்ரத்தை ஏற்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டபாயவை விரட்டியடிக்க கடந்த ஆண்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தால் பெரும் புரட்சி ஏற்பட்டு ராஜபக்ஷேக்களின் ஆட்சி ஆட்டம் கண்டிருந்த நிலையில் கோட்டபாயவும் நாட்டை விட்டு தப்பியோட தந்திரமாக ராஜபக்ஷேக்களின் ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய ரணில் தனக்கு அதே நிலை வரக்கூடும் என்ற அச்சதிலேயே இதை கூறியுள்ளதாகவே பார்க்க முடிகிறது.
அதுமட்டும் அன்றி போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவும், மக்களை அச்சம் கொள்ளவைத்து பாரிய போராட்டங்களில் பங்குகொள்ளாதவாறு தடுக்கவுமே இந்த யுக்தியை ஜனாதிபதி கையாளவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.