Home செய்திகள் விவசாயிகளுக்கென 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கிய சீனா:

விவசாயிகளுக்கென 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கிய சீனா:

17
0

இலங்கையில் விவசாயத் தேவைக்களுக்காகவென 6.98 மில்லியன் லீற்றர் டீசலை சீன அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது.

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் நெல் விதைத்துள்ள விவசாயிகள் இந்த எரிபொருள் நிவாரணத்தை பெற தகுதியானவர்கள் என தெரிவித்துள்ள இலங்கை விவசாய அமைச்சு, குறித்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்களை விவசாயிகளுக்கு கையளிக்கும்  வேலைத்திட்டம்  நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சு மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.