Home தாயக செய்திகள் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்

20
0

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது என திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதியை வழங்காததன் மூலம் திறைசேரியின் செயலாளர் உட்பட்டவர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ரஞ்சித்மத்தும பண்டார தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர்,உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என்றார்.