பெளத்த பிக்கு ஒருவர் சிறுவன் ஒருவனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிகல விகாரையைச் சேர்ந்த பெளத்த பிக்குவே மாத்தறை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த சிறுவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இதுவரை குறித்த தாக்குதலை மேற்கொண்ட பிக்குவை கைது செய்யவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ராஜபக்ஷேக்களின் சர்வாதிகார ஆட்சி இலங்கையில் ஆரம்பித்ததன் பின்னரே பல பெளத்த பிக்குகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.