Home உலக செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கு! மகனையும், மனைவியையும் கொலை செய்த வழக்கறிஞர்!!

அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கு! மகனையும், மனைவியையும் கொலை செய்த வழக்கறிஞர்!!

19
0

பல மில்லியன் டாலர் நிதிக் குற்றங்களில் இருந்து திசைதிருப்ப அவரது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்ததற்காக ஒரு சக்திவாய்ந்த சவுத் கரோலினா வழக்கறிஞர் ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

இரண்டு கொலை வழக்குகளிலும் 54 வயதான Alex Murdaugh குற்றவாளி என்றும், குற்றவாளிக்கு ஒவ்வொரு கொலைக் குற்றத்திற்கும் பரோல் இல்லாமல் 30 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் தீர்ப்பானது “சமூகத்தில் நீங்கள் யாராக இருந்தாலும், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபிக்கிறது” என்று தென் கரோலினாவின் உயர்மட்ட வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல் ஆலன் வில்சன் கூறினார்.

மேகி மற்றும் பால் முர்டாக் ஆகியோர் 7 ஜூன் 2021 அன்று அவர்களது குடும்ப எஸ்டேட்டில் உள்ள நாய் கூடுக்கு அருகில் நெருங்கிய தூரத்தில் சுடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.