Home செய்திகள் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!

மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!

16
0

அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பளை பகுதிக்கு அண்மையான புதுக்காட்டுச்சந்தியிலேயே இன்றைய தினம் (02) மணல் அகழ்வுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக கிளாலி, முகமாலை, புதுக்காடு, குடாரப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதை அவதானித்த மக்கள் அது தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்த போதும் அதை அவர்கள் கண்டுகொள்ளாததால் தொடர் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதை கண்டு ஆவேசமடைன் த மக்களே இன்றைய தினம் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.