Home செய்திகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மஹிந்த தேசப்பிரிய மீண்டும் விண்ணப்பம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மஹிந்த தேசப்பிரிய மீண்டும் விண்ணப்பம்!

23
0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களில் உறுப்பினர் நியமனங்களுக்காக, உரிய தகைமைகளைக் கொண்ட பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

2015 இலிருந்து 2020 வரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.