இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க எனக்கூறி விசேட அதிரடிப்படை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியாகவும், சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தரப்பினரால் கூறப்பட்டாலும், இது சுற்றுலா பயணிகளை பாதுகாக்க அல்ல என்றும் மாறாக சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவே என்றே கருதமுடிகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டகளிலும் சுற்றுலா பயணிகள் சிலர் பங்கேற்றதோடு சமூக வலைத்தளங்களில் போராட்ட காட்சிகளை பதிவேறியும் அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் தாக்கத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இவ் ஆண்டும் கடந்த ஆண்டைப் போல் மார்ச் மாத முதல் பகுதியில் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான போடாட்டங்கள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.